தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து பள்ளி வாகனம் விபத்து பல்லடம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி 6 வயது சிறுவன் பலி காலையில் உற்சாகமா பள்ளிக்கு சென்று மாணவன் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்தபோது பரிதாபம்
பல்லடம் அருகே பள்ளி வேன் மோதி யு.கே.ஜி.மாணவன் பலியானான். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவன்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பாச்சங்காட்டுபாளையத்தை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் சாய் சரண் (வயது 6). இவன் பல்லடம் அருகே பெத்தாம்பாளையத்தில் உள்ள ராஜா நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான். தினமும் பள்ளிக்கு சொந்தமான வேனில் மாணவன் பள்ளிக்கு சென்று வந்தான்.

வழக்கம் போல் நேற்று காலை பள்ளி வேனில் மாணவன் சாய் சரண் பள்ளிக்கு சென்றான். பின்னர் மாலையில் வகுப்புகள் முடிந்ததும் பள்ளி வேனில் வீட்டிற்கு சென்றான். வேன் மாணவன் வீட்டிற்கு அருகே வந்ததும் நிறுத்தப்பட்டது. அப்போது வேனில் இருந்து சாய் சரண் இறக்கிவிடப்பட்டான். மற்ற குழந்தைகளும் அங்கு இறக்கி விடப்பட்டனர்.

சாவு

பின்னர் பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது வேனின் பின் சக்கரத்தில் சாய்சரண் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் மாணவன் சாய் சரண் படுகாயம் அடைந்தான். உடனே சாய்சரணின் பெற்றோர் மற்றும் அருகில் உள்ளவர்கள் மாணவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாய் சரணை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த தகவலின் பெயரில் சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளிக்குச் சென்ற மாணவன் பள்ளி வேனிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments