சேதுபாவாசத்திரம் அருகே மனோரா கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தூத்துக்குடியிலிருந்து வேளாங்கண்ணிக்கு, கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு காரில் 11 பேர் நேற்று (20.01.2024) அதிகாலை சென்று கொண்டிந்துள்ளனர். அப்போது இவர்கள் சென்ற கார் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை  சேதுபாவாசத்திரம் காவல் சரகம் மனோரா அருகே செல்லும்போது சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்கள் சாலையை மறைத்து நின்றதால் வேகமாகச் சென்று சிறிய பாலத்தில் மோதியுள்ளது. அதி வேகமாக வந்த கார் பாலத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் அந்த காரில் பயணித்த பாக்கியராஜ் (62), ஞானம்பாள் (60), ராணி (40), சின்னப்பாண்டி (40) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த கார் விபத்தில் மரிய செல்வராஜ் (37), பாத்திமா மேரி (31), சந்தோஷ்செல்வம் (7), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சண்முகத்தாய் (53) ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உலக சாதனை படைத்த திமுக இளைஞர் அணி மாநாட்டு அரங்கம்!
இதனையடுத்து இந்த சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவித்திருந்தார். அதன்படி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 25 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தனது இரங்கலையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த கணபதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் படுகாயமடைந்த 6 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments