புதுக்கோட்டை மாவட்டத்தில் 27, 28-ந் தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வனத்துறை மூலம் பறவைகள் கணக்கெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஈர நிலப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற 27, 28-ந் தேதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பறவைகள் இனம், எண்ணிக்கை, அவைகள் எங்கிருந்து வருகிறது போன்ற விபரங்கள் சேகரிக்கப்படுவதுடன் கூடுதலாக ஈர நிலப்பகுதிகளில் பறவைகள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தண்ணீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு ஆய்வு முடிவுகள் பெறப்பட்டு பதிவு செய்யப்படும். இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள் தங்கள் விபரத்தை birdcenuspudukkottai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 98657 86667 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு வருகிற 25-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம். இதில் கலந்து கொள்பவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments