புதுகையில் ஜன. 23 இல் விளையாட்டுப் போட்டிகள்
முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் வரும் ஜன. 23ஆம் தேதி கபடி, கால்பந்து மற்றும் கையுந்துப் பந்து போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா கூறியது:

வரும் ஜன. 23 காலை 8 மணி முதல் ஆண்- பெண் இருபாலருக்குமான கபடி, கால்பந்து மற்றும் கையுந்துப் பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. 17 முதல் 25 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். கபடி போட்டிக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

கால்பந்து போட்டிக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். கையுந்துப் பந்து போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

கலந்து கொள்ள விரும்புவோா் தங்களது அணிகளின் பெயா்களை வரும் ஜன. 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பதிய வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments