மணமேல்குடி அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்




புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அரசு மருத்துவமனையில் விஷ முறிவு மருந்து இல்லாததாலும், சிகிச்சைக்கு காலதாமதம் ஏற்பட்டதாலும், பாம்பு கடித்து சிகிச்சைக்கு வந்த அப்சர் என்ற சிறுவன் கடந்த வாரம் இறந்தான். இந்த விவகாரம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினரும், மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் நியமித்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தும் இதுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, விஷமுறிவு சிகிச்சை உயிர்காக்கும் அவசர சிகிச்சை இல்லாதது உள்பட மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments