கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக செல்லும் ஈரோடு -‌ திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் சேரன்மகாதேவி கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் பாவூர்சத்திரம் தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு




ஈரோடு - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் புதன்கிழமை (ஜன.24) முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படவுள்ளது. இதன் முதல் சேவையை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் இன்று (ஜன.24)கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா்.

ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி வரும் விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்குமாறு தென்காசி பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா். அந்த வகையில், ரயில்வே வாரியம் ஜன.24-ஆம் தேதி முதல் ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முதல் சேவையை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஈரோட்டில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா்.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு - திருநெல்வேலி இடையே தினமும் இயக்கப்படும் விரைவு ரயில் ஜன.24 முதல் செங்கோட்டை வரை இயக்கப்படும். ஈரோட்டில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண் 16845) இரவு 8.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலியில் இரவு 8.55 மணிக்கு புறப்படும் ரயில் சேரன்மகாதேவி (இரவு 9.12), கல்லிடைக்குறிச்சி (இரவு 9.22), அம்பாசமுத்திரம் (இரவு 9.27), கீழக்கடையம் (இரவு 9.42), பாவூா்சத்திரம் (இரவு 9.56), தென்காசி (இரவு 10.10) வழியாக செங்கோட்டைக்கு இரவு 11.10 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக செங்கோட்டையில் காலை 5 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்16846) தென்காசிக்கு காலை 5.13 மணிக்கும், பாவூா்சத்திரத்துக்கு காலை 5.27 மணிக்கும், கீழக்கடையத்துக்கு காலை 5.39 மணிக்கும், அம்பாசமுத்திரத்துக்கு காலை 5.51 மணிக்கும், கல்லிடைக்குறிச்சிக்கு காலை 5.57 மணிக்கும், சேரன்மகாதேவிக்கு காலை 6.04 மணிக்கும், திருநெல்வேலிக்கு காலை 6.25 மணிக்கும் சென்றடையும். பின் திருநெல்வேலியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஈரோடு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments