மணமேல்குடி ஆதார் சேவை மையத்தில் டோக்கன் முறையை பின்பற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை




மணமேல்குடி தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையத்தில் ஆதார் புதிதாக எடுத்தல், பிழை திருத்தம் செய்தல் என பல்வேறு வேலைகளுக்கு தினசரி மணமேல்குடி சுற்றியுள்ள கிராமங்கள், மீனவ கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் ஆதார் சேவை மையத்திற்கு காலையில் வந்தால் கூட்டம் காரணமாக அன்றைய தினம் எந்த திருத்தமும் செய்ய முடியாமல் போகிறது. மேலும் தினசரி மீன்பிடிக்க செல்பவர்கள், விவசாய கூலி வேலை செய்பவர்கள், சிறு குழந்தைகளை கூட்டி வரும் தாய்மார்கள் என அனைவரும் 2 முதல் 3 நாட்கள் வரை அலைக்கழிக்கப்பட்டு ஆதார் வேலை முடிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டோக்கன் முறையை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments