நிதி முறைகேடு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க தவறிய நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அதிகாரம் பறிப்பு! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!




நிதி முறைகேடு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க தவறிய நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையர்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் சீதாலெட்சுமி. இவர் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில்லை என்றும், நிதி முறைகேட்டில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ஆம் ஆண்டு சட்டப் பிரிவு 204 இன் கீழ் சட்டப்பூா்வமான விளக்கம் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அதன்பேரில், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிமன்றத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாதது குறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. அதில் அந்த ஊராட்சியில் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவில்லை மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து ஊராட்சிமன்றத் தலைவர் சீதாலெட்சுமியிடம் இருந்து காசோலை அதிகாரத்தை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 203-இன் கீழ் ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா I.A.S உத்தரவிட்டார். மேலும், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments