புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது முதற்கட்டமாக கைக்குறிச்சி வரை பணி




புதுக்கோட்டை-அறந்தாங்கி இடையேயான சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. முதற்கட்டமாக கைக்குறிச்சி வரை அமைக்கப்பட உள்ளது.

வாகன போக்குவரத்து

புதுக்கோட்டை மாவட்டத்தின் 2-வது நகராட்சி பகுதியாக அறந்தாங்கி அமைந்துள்ளது. விவசாயம் மட்டும் வர்த்தக ரீதியாகவும் வளர்ந்த பகுதியாகவும். புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலை 2 வழிச்சாலையாக உள்ளது. மாநில நெடுஞ்சாலையான இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.

பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகரித்ததன் காரணமாக 2 வழிச்சாலையாக உள்ள சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.

முதற்கட்ட பணிகள் தொடக்கம்

இந்த 4 வழிச்சாலை அமைப்பதற்காக பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. இது குறித்து அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகையில், "புதுக்கோட்டை-அறந்தாங்கி இடையேயான சாலையை 4 வழிச்சாலையாக்குவதற்கு முதற்கட்டமாக புதுக்கோட்டையில் இருந்து கைக்குறிச்சி வரை 5 கிலோ மீட்டர் தூரம் ரூ.37 கோடியில் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கைக்குறிச்சியில் இருந்து அடுத்தடுத்து குறிப்பிட்ட தூரத்திற்கு 4 வழிச்சாலையாக மாற்றப்படும். தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ள இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக தடுப்பு சுவரில் இருந்து இருபுறமும் தலா 7.5 மீட்டர் அகலத்தில் என 15 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும். இந்த சாலையானது அழியாநிலை வரை அமைக்கப்படும்'' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments