அதிரையில் தொடர் விபத்துகள்.. மாணவர்களுக்கு காதிர் முகைதீன் கல்லூரி எச்சரிக்கை! 3 கட்டளைகள்






அதிரையில் தொடர் விபத்துகள்.. மாணவர்களுக்கு காதிர் முகைதீன் கல்லூரி சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

 "அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை (ECR) சாலையில் விபத்துகள் நடந்து வருவதன் காரணமாக பல உயிர்கள் பலியானதால் அதிராம்பட்டினம் காவல் துறை சார்பாக மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது. 

ஆகவே கீழ்கண்ட அறிவுறுத்தல்களை அவசியம் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் சார்ந்த மாணவர்கள் மீது கல்லூரி மற்றும் காவல்துறை சார்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தலாகிறது.

1. அனைவரும் வாகன உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தில் பயணிக்கக் கூடாது.

2. அனைவரும் தலைக் கவசம் இல்லாமல் வாகனத்தில் பயணிக்கக் கூடாது.

3. இரு சக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணிக்கக் கூடாது.

எனவே மாணவர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் தலைக் கவசத்துடன் கல்லூரிக்கு வரவும். மீறினால் அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒத்துழைக்காத மாணவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்படும் எனவும் எச்சரிக்கலாகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments