10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் அட்டையை ஆன்லைனில் டிசம்பர் 14 வரை இலவசமாக புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆதார் அட்டையில் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்யும் கடைசி நாளை செப்டமபர் 14 முதல் 14-மார்ச்-2024 UIDAI நீட்டித்துள்ளது மத்திய அரசு
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால் ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், தற்போது, இந்த சேவையை 14-மார்ச்-2024 வரை இலவசமாக மைஆதார் 'my Aadhaar' எனும் இணையத்தில் அப்டேட் செய்யலாம் என ஆதார் ஆணயம் அறிவித்துள்ளது
ஆதார் அப்டேட் செய்வது எப்படி:-
https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் செல்லவும்.
அடுத்து அதில் லாகின் என்பதை கிளிக் செய்து உள் நுழையுங்கள்
அதன்பின்பு உங்கள் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபியை பதிவிடுங்கள்
அடுத்து வரும் பக்கத்தில் 'Document Update' என்பதை கிளிக் செய்யுங்கள்
அதில் உங்கள் ஆதார் விவரங்களை சரி பார்த்து கொள்ளுங்கள்
அடுத்து உங்கள் முகவரி மற்றும் அடையாள ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்து தங்கள் ஆதாரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆதாரில் உள்ள முகவரி மாற்றம் செய்ய:-
Update your Address Online” என்ற வசதியை கிளிக் செய்யவும்.
உங்களிடம் சரியான முகவரிச் சான்று இருந்தால் “Proceed to Update Address” என்பதில் கிளிக் செய்யவும்.
அடுத்து உங்களது இருப்பிட முகவரியைப் பதிவு செய்து submit கொடுத்து முகவரிச் சான்றுக்கான சரியான ஆவணத்தின் ஸ்கேன் காப்பியை அப்லோடு செய்து ”submit" கொடுக்க வேண்டும்.
உங்களது ஆதார் அப்டேட் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கு ஒரு உறுதிப்படுத்தும் எண்ணும் வழங்கப்படும். இந்த எண்ணை வைத்து உங்களது ஆதார் அப்டேட் ஸ்டேட்டஸை நீங்கள் பார்க்கலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.