தமிழகத்தில் மீட்டர்கேஜ் பாதைகளாக இருந்த பல்வேறு ரெயில் வழித்தடங்கள் அகல ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன. அந்த வகையில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கின.
ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு நிறைவடைந்து திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே தற்போது ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த ரெயில் வழித்தடம் 149.5 கி.மீ. தூரம் கொண்டதாகும். இந்த வழித்தடத்தில் தற்போது பயணிகள் மற்றும் விரைவு ரெயில்கள் 75 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. ரெயிலின் வேகத்தை 110 கி.மீ. அளவுக்கு அதிகப்படுத்தி பயண நேரத்ைத மேலும் குறைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதனையடுத்து நேற்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டத்தை நடத்த ரெயில்வே திட்டமிட்டு இருந்தது. அதன்படி திருவாரூரில் இருந்து நேற்று மதியம் 2 மணிக்கு சோதனை ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் திருத்துறைப்பூண்டி வழியாக அகஸ்தியம்பள்ளி வரை இயக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் இருந்து மாலை 4.40 மணிக்கு அதிவேக சோதனை ரெயில் காரைக்குடி நோக்கி புறப்பட்டது. தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக மணிக்கு 121 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. 122 கி.மீ. பயணம் செய்து காரைக்குடியை மாலை 5.40 மணிக்கு ரெயில் சென்றடைந்தது. அதாவது திருத்துறைப்பூண்டியில் இருந்து காரைக்குடிக்கு ரெயில் ஒரு மணிநேரத்தில் சென்றடைந்தது.
திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் தடத்தில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வருங்காலத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 110 கி.மீ. வேகத்திற்கு இயக்கப்பட உள்ளது. இதனால் திருவாரூர்-காரைக்குடி இடையே பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து 1½ மணி நேரமாக குறைய அதிக வாய்ப்பு உள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.