அறந்தாங்கியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்




புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடி ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:- தமிழக அரசால் தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகள் இடம் இருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆயிங்குடி ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஆயிங்குடி தெற்கு, மேற்கு, வடக்கு, நெய்வத்தளி ஊராட்சி அரசர்குளம், வடபாதி ஆகிய கிராமங்களை சேர்ந்த 1,000 விவசாயிகள் பயன் பெறும் வகையில் இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விற்பனை செய்து பயன்பெற வேண்டும் என்றார். இதில் நுகர்பொருள் பணிப்பா கழக மண்டல மேலாளர் சீதாராமன், தர கட்டுப்பாடு துறை மேலாளர் பன்னீர்செல்வம், கொள்முதல் நிலைய பொறுப்பாளர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments