மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை




மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

சாலை ஓரத்தில் கருவேல மரம்

நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை புதுக்கோட்டை மாவட்டம் வழியாக செல்கிறது. புதுக்கோட்டை மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில்  பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்திரிகர்களும் ராமேஸ்வரம், ஏர்வாடி,  திருச்செந்தூர், வேளாங்கண்ணி, நாகூர் போன்ற ஆன்மீக தலங்களுக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் ராமேஸ்வரம், தூத்துக்குடி பாம்பன், தொண்டி கோட்டைப்பட்டிணம் ,.ஜெகதாப்பட்டிணம் கட்டுமாவடி, நாகப்பட்டினம்  பகுதிகளிலிருந்து மீன் உள்ளிட்ட கடல் சார் பொருட்கள், மற்ற     இதர பொருட்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்கிறது.

இதனைப் போன்று காரைக்கால் ,தூத்துக்குடி பெரிய துறைமுகத்திலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் பஸ்கள், பள்ளி, கல்லூரி வேன்கள் மற்றும் டூவீலர்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் என இந்த பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது. 

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே S.P மடம் ‌, குமரப்பன்வயல் கிழக்கு கடற்கரை சாலை சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள், லாரிகள் உள்பட கனரக வாகனங்கள் அதிகமாக செல்கிறது. 

பிரதான சாலையாக உள்ள இதில் சில இடங்களில் சாலையோரங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து வருகிறது. இதனால் ஒரே நேரத்தில் சாலையில் இருபுறமும் வாகனங்கள் வரும் போது இரு சக்கர வாகனங்கள் சாலையோரம் ஒதுங்கினால் அந்த சீமைக்கருவேல மரச்செடிகளின் கிளைகள் அவர்கள் மீதோ அல்லது வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மீதோ படக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படக்கூட நேரிடலாம்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் சற்று கவனம் செலுத்தி சாலையில் ஓரத்தில் வளர்ந்து வரும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் காட்டுச்செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். இந்த முட்புதர்கள் மற்றும் செடியினால் விபத்து ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments