புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ‘லிப்ட்’ அமைக்கும் பணி தீவிரம்




புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ‘லிப்ட்' அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடிப்படை வசதிகள்

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அம்ரித் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடை மற்றும் 2-வது நடைமேடைக்கு செல்லும் வகையில் ‘லிப்ட்' வசதி ஏற்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே நடைபாதை மேம்பாலம் உள்ள நிலையில் அதன் அருகே 2 இடங்களில் ‘லிப்ட்' அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன. இதில் முதலாவது நடைமேடையில் நடைபாதை மேம்பாலம் அருகே லிப்ட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

2-வது நடைமேடை

இதற்கிடையில் ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் நடைபாதை மேம்பாலம் அருகே ‘லிப்ட்' அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிற நிலையில் ‘லிப்ட்' அமைப்பது விரைந்து முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை லிப்ட்டை பயன்படுத்தி நடைமேடைகளுக்கு செல்ல முடியும்.

இதேபோல ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடையில் விடுபட்ட இடங்களில் மேற்கூரைகள் அமைக்கும் பணியும் தொடங்கி நடைபெறுகிறது. ரெயில் நிலையத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments