புதிய வழித்தடத்தில் ராமேசுவரத்திற்கு பஸ் வசதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்




அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ராமநாதபுரத்தில் இருந்து புண்ணிய தலங்களான திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், முத்துப்பேட்டை, தாமரைக்குளம், புதுமடம், பிரப்பன்வலசை வழியாக புதிய வழித்தடத்தில் ராமேசுவரத்திற்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல ராமேசுவரத்தில் இருந்து மேற்கண்ட ஊர்கள் வழியாக ராமநாதபுரத்திற்கு பஸ் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ் தினமும் 4 முறை இயக்கப்பட உள்ளது. இந்த புதிய பஸ் சேவையை ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அந்த பஸ்சில் அமைச்சர், கலெக்டர் விஷ்ணு சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் ஆகியோர் டிக்கெட் வாங்கி சிறிது தூரம் பயணம் செய்தனர். நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக பொது மேலாளர் சிங்காரவேலன், கோட்ட மேலாளர் பத்மகுமார், ராமநாதபுரம் நகர்மன்ற துணை தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கவிதாயினி, கவிதா கதிரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments