ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்




ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தில்குமரன் பேசுகையில், குப்பை பேட்டரி வாகனம் வந்து நீண்ட காலம் ஆகியும் அந்த வாகனங்கள் அலுவலகத்திலேயே முடங்கி கிடக்கிறது. ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு திட்டத்தில் சாலை வசதி, குளத்து குடியிருப்பு வழியாக பெருநாவலூர் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கவில்லை என்றார். பொன்பேத்தி ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன், மீமிசல் ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் சாலை வசதி வேண்டும் என்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சிவகாமி பேசுகையில், வாகனம் பெயிலியர் (உபகரணங்கள் செயல் இழப்பு), அதனால் அந்த வாகனம் ஓடாது, அதை திருப்பி அனுப்ப வேண்டும். சாலைகள் சீரமைக்க நிதி ஒதுக்கப்படும் என்றார். ஒன்றிய அலுவலர் முருகையா தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments