ரயிலில் திருடு போன செல்போன் கூகுள்மேப் மூலம் செல்போனை மீட்டு திருடனை பிடித்த இளைஞர்! முழு விவரம்




ரயிலில் திருடு போன செல்போன் கூகுள்மேப் மூலம் செல்போனை மீட்டு திருடனை பிடித்த இளைஞர்! முழு விவரம்

Raj Bhagat என்பவர் தனது டிவிட்டரில் வலைதளத்தில்

தனது தந்தை நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு நாகர்கோவில் - காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார், எனது தந்தை தூங்கியவுடன் எனது அப்பாவின் பேக் மற்றும் செல்போனை திருடிவிட்டு திருநெல்வேலி சந்திப்பில் மர்ம நபர் ரயிலில் இருந்து இறங்கி உள்ளார். 

மேலும் எனது தந்தை அதிகாலை முழிப்பு வந்தவுடன் எழுந்து பார்க்கையில் பேக் மற்றும் செல்போன் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளார்  மேலும் அங்கிருந்த ஒருவரின் மொபைல் போன் மூலம் எண்ணை தொடர்பு கொண்டு செல்போன் மற்றும் பை திருடுப்போனதை தெரிவித்தார்.


மேலும் நான் எனது தந்தையின் செல்போனில் Location Sharing ஆன் செய்யப்பட்டு இருந்ததால் கூகுள் மேப் மூலம் மொபைல் போனை நான் கண்காணிக்க முடிந்தது. மேலும் அந்த திருடன் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு  ரயிலில்  செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து செல்போன் திருடனை பிடிக்க எனது நண்பருடன் நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றோம் ஆனால் கூட்டம் அதிகமாக இருந்தால் திருடனை  கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போது மொபைல் கூகுள் மேப் லைவ் லொக்கேஷனில் ரயில் இருந்து  பேருந்து நிலையத்திற்க்கு செல்லும் பஸ்சில் சென்றதை அறிந்து பைக்கில்  பின்தொடர்ந்தோம்.

வடசேரி பேருந்துநிலையம் சென்ற அந்த பேருந்தில்  எனது தந்தை சிஐடியூ தொழிற்சங்க உறுப்பினர் என்பதால் . அவர் வைத்திருந்த பேக்கில் சிஐடியூ என எழுதப்பட்டு இருந்த அடையாளம் கண்டு திருடனை பிடித்து எனது தந்தை பைக்கையும், செல்போனையும் மீட்டோம்  அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்

அந்த டிவிட்டர் பதிவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments