மணமேல்குடி ஒன்றியத்தில் பெற்றோரை கொண்டாடுவோம் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு குறித்த அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கான முன் திட்டமிடல் கூட்டம்
மணமேல்குடி ஒன்றியத்தில்  பெற்றோரை கொண்டாடுவோம்  மற்றும் இல்லம் தேடி கல்வி  தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு குறித்த  அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கான முன் திட்டமிடல் கூட்டம்  மணமேல்குடி வட்டார வள மையத்தில் வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமையில் தொடங்கியது.

வட்டார கல்வி அலுவலர்  இந்திராணி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் பெற்றோரை கொண்டாடுவோம்  மற்றும் இல்லம் தேடி கல்வி  தன்னார்வலர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் மாநாடில் தன்னார்வலர்கள் பங்கு பெறுதல் மற்றும் ஆயத்தம் செய்தல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள்
விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் அங்கையற்கண்ணி ஆகியோர் கலந்து கொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments