நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர் வழியாக செல்லும் காரைக்கால் - திருச்சி முன்பதிவில்லாத ரயில் 09-02-2024 முதல் நேரம் மாற்றம் தெற்கு ரயில்வே அறிவிப்பு




திருச்சி ரெயில் நிலையத்திற்கு காரைக்காலில் இருந்து வண்டி எண்: 06739 காரைக்கால் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கமாக காரைக்காலில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 6.35 மணிக்கு வந்தடையும். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் புறப்படும் நேரம் மாற்றப்பட்டு மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 6.45 மணிக்கு வந்தடையும். இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments