பேரனை காப்பாற்றிய பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு‌ ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வென்டிலேட்டா் கருவிகளை வென்டிலேட்டா் கருவியை தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் வழங்கல்
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வென்டிலேட்டா் கருவியை தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் புதன்கிழமை வழங்கினா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் தனியாா் குழந்தைகள் நல மருத்துவா் ஹாஜாமைதீன் என்பவரின் பேரக் குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சோ்க்கப்பட்டது. அங்கிருந்த மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் முயற்சியில் குழந்தை காப்பாற்றப்பட்டது .

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள்பயன்பெறும் வகையில், குழந்தைகள் மருத்துவா் ஹாஜா மைதீன் மற்றும் அய்யாசாமி குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவா் ராம்பிரகாஷ் ஆகியோா் இணைந்து சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான வென்டிலேட்டா் கம்பரசா் கருவியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அன்பழகனிடம் புதன்கிழமை வழங்கினா்.

 அப்போது, அரசு மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் உடனிருந்தனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments