புதுக்கோட்டை – அறந்தாங்கி – ஆவுடையார்கோவில் – மீமிசல் சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் - பாராளுமன்றத்தில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் M.P வலியுறுத்தல்






புதுக்கோட்டை – அறந்தாங்கி – ஆவுடையார்கோவில் – மீமிசல் சாலை  தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் -  பாராளுமன்றத்தில் திருச்சி மக்களவை உறுப்பினர்  திருநாவுக்கரசர் M.P வலியுறுத்தினார் 

இன்று (09.2.24) பாராளுமன்ற விதி 377-ன்கீழ் தமிழகத்தில் கீழ் குறிப்பிட்டுள்ள சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த பாராளுமன்றத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். அதன் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 




திருச்சிராப்பள்ளி – புதுக்கோட்டை – காரைக்குடி – தேவகோட்டை – தேவிபட்டினம் வரையிலான இருவழி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்துதல்.

தஞ்சாவூர் - புதுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி - கல்லல் - காளையார்கோவில் - மறவமங்கலம் - இளையான்குடி - பரமக்குடி - முதுகுளத்தூர் - சாயல்குடி சாலை (மாநில நெடுஞ்சாலை 29) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துதல் (தோராயமாக 240 கி.மீ).

புதுக்கோட்டை – அறந்தாங்கி – ஆவுடையார்கோவில் – மீமிசால் சாலை (மாநில நெடுஞ்சாலை 26) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துதல் (தோராயமாக 70 கி.மீ).

அறந்தாங்கி – நாகுடி – கட்டுமாவடி சாலையை (மா.நெ.145) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துதல்;

முசிறி - குளித்தலை - புதுக்கோட்டை - ஆலங்குடி - பேராவூரணி - சேதுபாவ சத்திரம் (மாநில நெடுஞ்சாலை 71) ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துதல் (சுமார் 160 கி.மீ.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்குமாறு வேண்டிக் கேட்டுககொள்கிறேன்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments