அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது31). இவர்அதிராம்பட்டினத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கலைக்கல்லூரியில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கிழக்கு கடற்கரை சாலை வழியில் ஜீப்பை ஓட்டி கொண்டு வந்தார். அப்போது அதிராம்பட்டினத்தில் இருந்து புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த முகமது ராவுத்தர் (45), இதே பகுதியை சேர்ந்த அராபாத் (36) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் சுப்பிரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்த ரஜினிகாந்த் (46) ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராஜாமடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரிப்புறக்கரை பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே கார்த்திகேயன் ஓட்டி வந்த ஜீப், 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. இதில் முகமது ராவுத்தர் மற்றும் அராபாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிறிய அளவில் காயம் அடைந்த கார்த்திகேயன் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினிகாந்த் எந்தவித காயமும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது தொடர்பான புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.