பாம்பனில் விபத்து 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; காயத்துடன் தப்பிய பயணிகள்




பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ்சும், தனியார் சுற்றுலா பஸ்சும் நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்கின. இதில் காயத்துடன் பயணிகள் உயிர் தப்பினர்.

பஸ்கள் மோதல்

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் ரவி ஓட்டினார். இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி ஒரு தனியார் சுற்றுலா பஸ் வந்தது. இந்த 2 பஸ்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 2 பஸ்களில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மண்டபம் மற்றும் ராமேசுவரம் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பாம்பன் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments