இராமநாதபுரம் : இழப்பின் துயரத்திலும் உள்ளத்தை நெகிழ வைக்கும் குடும்பத்தினரின் நற்செயல்




இராமநாதபுரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மருத்துவர் உமாகணேஷ் நினைவாக விபத்து ஏற்பட்ட பகுதியில் இரண்டு லட்சம் மதிப்புள்ள சோலார் விளக்குகளை அவர்களது குடும்பத்தார் அப்பகுதிக்கு அர்ப்பணித்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாந்தை பகுதியில்  விளக்குகள் குறைவாக இருப்பதால் இரவு நேரங்களில் கனரக வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுட்டு வருகிறது, இந்நிலையில் கடந்த 12. 01.2024 அன்று இரவு ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரபல நுரையீரல் சிறப்பு மருத்துவர் உமாகணேஷ் அவர்கள் மதுரையில் இருந்து இராமநாதபுரம் நோக்கி லாந்தை பகுதிக்கு வந்தபோது சாலை நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது தனது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இச்சம்பவம் இராமநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, இதனை அடுத்து அவர்களின் குடும்பத்தார்  அப்பகுதியில் இனி விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சோலார் விளக்குகளை அமைத்து, மருத்துவர் உமாகணேஷ் நினைவாக அப்பகுதிக்கு அர்ப்பணித்தனர், இதில் அவரது குடும்பத்தினர் ரமேஷ்பாபு, கீதா ரமேஷ்பாபு, மருத்துவரின் மனைவி அக்ஷிதா ரமேஷ்பாபு, மருத்துவர் ஜெகன் அக்ஷய் மற்றும் ரோட்டரி சங்க தலைவர் அதிசய பாபு, ரோட்டரி சங்க செயலாளர் ரத்தினவேலு மற்றும் மருத்துவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு விபத்து நடந்த இடத்தில் மலர் தூவி அவர் நினைவாக சோலார் விளக்குகளை அப்பகுதிக்கு அர்ப்பணித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments