கியான்வாபி பள்ளிவாசலின் கீழ்த்தளத்தில் பூஜை செய்து கொள்ள வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து வழங்கியுள்ள தீர்ப்பு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாபர் மசூதியையும், இதுபோன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தித்தான் இஸ்லாமிய தரப்பிடமிருந்து பறித்தனர். அடுத்து காசி மற்றும் மதுராவில் உள்ள பள்ளிவாசல்களை பறிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் முன்னெடுத்து வருகின்றன.
1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்புச்சட்டம், இந்திய நாடு சுதந்திரம் பெறும் போது, எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ, அவை அப்படியே தொடர உத்தரவாதம் அளித்தது. ஆனால், அதற்கு மாற்றமான நடவடிக்கைகளில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
ஜனநாயகமும், சட்ட நெறிமுறைகளும் குழித் தோண்டிப் புதைக்கப்படும் இக்காலக் கட்டத்தில். ஜனநாயக ரீதியாக எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலும், அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.
அந்த அடிப்படையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக, இன்று 10.02.2024 சனிக்கிழமையன்று, புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் அவர்கள் தலைமை தாங்கினார்கள், மாநிலப் பேச்சாளர் பா. அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்தும், ஆளும் ஒன்றிய அரசு இப்பிரச்சினைகளை இந்நேரத்தில் கையிலெடுப்பதன் பின்னனி குறித்தும் பேசினார்கள்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் முகமது மீரான், மாவட்டப் பொருளாளர் ரபீக் ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது மீரா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் குலாம் முகமது பாட்ஷா, ஷேக் அப்துல்லாஹ், புதுகை மீரான் மைதீன், மாவட்ட மருதுவர் அணிச் செயலாளர் சபியுல்லாஹ், மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் இல்யாஸ் மற்றும் மாவட்டத் தொண்டர் அணிச் செயலாளர் ஹாஜா மொய்தீன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என ஆயிரக்கணக்கானவர்கள் எழுச்சியோடு கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் துணைச் செயலாளர் குலாம் முகமது பாட்ஷா அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுற்றது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.