புதுக்கோட்டை கோர்ட்டு கட்டிடம் ரூ.15 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது




புதுக்கோட்டை கோர்ட்டு கட்டிடம் ரூ.15 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.

பழமையான கட்டிடம்

புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக விளங்கிய காலத்தில் தொண்டைமான் மன்னர்களால் கட்டப்பட்டது கோர்ட்டு கட்டிடம். புதுக்கோட்டையின் அடையாளமாக இந்த கோர்ட்டு கட்டிடம் திகழ்கிறது. சுமார் 140 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தின் கம்பீர தோற்றம் இன்றளவும் நிலைத்து காணப்படுகிறது. அரசு பொது வளாகமாக இயங்கி வந்த இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அலுவலகங்களும் இயங்கி வந்தன.

இதனை வேறு இடத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்றமாக திகழ்கிறது. அரசு கருவூலம் இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை கோர்ட்டு கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

இதையடுத்து புதுக்கோட்டை கோர்ட்டு கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.15 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. மேலும் இதற்கான பணிகள் புதுக்கோட்டையில் கடந்த 3-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுப்பிக்கும் பணி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்த கோர்ட்டு கட்டிடத்தின் தன்மை, பழமை மாறாமல் அப்படியே புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக பழமையான முறையிலேயே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி, கற்றாழை, ஆற்றுமணல், ஆச்சிக்கல், தட்டு ஓடு, சிகப்பு செங்கல், மங்களூர் ஓடுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் புதுக்கோட்டை கோர்ட்டு கட்டிடம் அப்படியே பழமை மாறாமல் இருக்கும். இந்த பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments