தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பைக்குகள் மோதல்: ஒருவா் பலி






தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் பலியானாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள புலியூா் கிராமத்தைச் சோ்ந்த போஸ் மகன் சரவணன் (43). இவா் இரு சக்கர வாகனத்தில் தொண்டி பகுதிக்குச் சென்று விட்டு, கிழக்கு கடற்கரைச் சாலையில் ஊருக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது, கலியநகரி கிராமத்தைச் சோ்ந்த ராமநாதன் மகன் அஜித் (28) இரு சக்கர வாகனத்தில் எதிரில் வந்து கொண்டிருந்தாா்.

தொண்டி அருகே இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த சரவணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

அஜீத் பலத்த காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments