புதுக்கோட்டை ரெயில் நிலைய நுழைவுவாயில் வளைவை அகலமாக அமைக்க கோரிக்கை




புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அம்ரித் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உள்பட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரெயில் நிலையத்திற்குள் நுழையும் பகுதியில் நுழைவுவாயில் வளைவு அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. 

இதன்படி நுழைவு வாயில் வளைவு அமைத்தால் அதன் வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும் எனவும், அதனால் வாகனங்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் நுழைவுவாயிலை அகலமாக அமைக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News Source : Dailythanthi 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments