இலங்கை அரசை கண்டித்து நடத்தப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்கின்றனர்




இலங்கை அரசை கண்டித்து நடத்தப்பட்ட காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்கின்றனர்.

மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

இந்த பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் கைது செய்வது வழக்கமாக உள்ளது. மேலும் கைது செய்யப்படும் மீனவர்களை ஒரு மாதம் சிறையில் அடைத்து பின்பு விடுதலை செய்து வந்தனர்.

வேலைநிறுத்தம்

இந்நிலையில் இலங்கையில் புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் எல்லை தாண்டி மீன் பிடித்தால் 1 ஆண்டு சிறை தண்டனையும், படகு அரசுடைமை ஆக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மீனவர்கள் இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

வாபஸ்

இந்நிலையில் இந்த போராட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிப்படைந்தது. மீன்பிடி சார்ந்த தொழில்களும் பாதிப்படைந்தது. இதனை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மீனவர்கள் அறிவித்தனர்.

அதன் அடிப்படையில் இன்று (புதன்கிழமை) வழக்கம்போல் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments