அறந்தாங்கியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு




அறந்தாங்கியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அதிவேக ரெயில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பெரிய நகரமாக அமைந்துள்ளது. இங்கு நகராட்சி, ஊராட்சி அலுவலகம், பஸ் நிலையம், ரெயில் நிலையமும் அமைந்து உள்ளன. ஒ.எம்.எஸ். அதிவேக ரெயில் ஆய்வு அறந்தாங்கி ரெயில்வே வழித்தடத்தில் நடந்த போது, இங்குள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இருப்புபாதைகளை கடப்பதையோ, ரெயில்பாதை அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதையோ, இருசக்கர வாகனங்களில் கடப்பதையோ தவிர்த்தனர்.

இந்த வழித்தடத்தில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டத்தில் எவ்வித தடைகளுமின்றி நிர்ணயிக்கப்பட 121 கி.மீ.பிஹெச் வேகத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் அறந்தாங்கி ரெயில் நிலையத்தை கடந்து காரைக்குடி நோக்கி ரெயில் விரைவாக கடந்து செல்கிறது.

10 கி.மீ.சுற்றி...

அறந்தாங்கி-கட்டுமாவடி சாலை மற்றும் மீமிசல் சாலையில் 2 ரெயில்வே கேட் உள்ளது. இந்த நிலையில் அடிக்கடி ரெயில்வே கேட் அடைக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டு, அப்பகுதி பொதுமக்கள் ரெயில்வே கேட்டை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அவசரத்திற்கு கூட வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டி உள்ளது. இதனை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுநாள் வரைக்கும் ெரயில்வே துறை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது.

கோரிக்கை

விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் கொண்டு செல்ல முடியாமலும் உள்ளது. எனவே மணமேல்குடி தாலுகா, ஆவுடையார்கோவில் தாலுகாவில் ஏற்படக்கூடிய விபத்துக்களுக்கான அவசர சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் அந்த 2 ரெயில்வே கேட்டையும் கடந்து தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் சில நேரங்களில் உயிர் இழப்புகள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அறந்தாங்கியில் ரெயில்வே கேட்டை பொதுமக்கள் கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ெரயில்வே துறை அதிகாரிகள் வந்து 2 ெரயில்வே கேட்டை ஆய்வு செய்து இந்த வழியில் செல்லும் போக்குவரத்தை உறுதி செய்தும் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஏதாவது ஒரு விபத்து ஏற்படும் போது ரெயில்வே கேட்டால் உயிர் இழப்பு ஏற்பட்டால் அதற்கு ரெயில்வே துறை அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் பொதுமக்கள் நலன் கருதி இந்த 2 ரெயில்வே கேட்டு வழியாக செல்வதற்கு சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments