கோட்டைப்பட்டினத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ரூ.44 லட்சத்தில் புதிய கட்டிடம் அப்துல்லா எம்.பி. அடிக்கல் நாட்டினார்






புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா  கோட்டைப்பட்டினத்தில் உள்ள அரசு பெண்–கள் உயர்நிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இங்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் மாணவிகள் மரத்தடி நிழலிலும், தரையில் அமர்ந்தும் கல்வி பயின்று வந்தனர். 

எனவே இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என பல்வேறு தரப்பி–னர் கோரிக்கை விடுத்தனர். 

அதன் அடிப்படையில் பள்ளிக்கு ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம் கட்ட அப்துல்லா எம்.பி. நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து, அரசு பள்ளியில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. 

விழாவில் மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக முதல் மதிப்–பெண் எடுத்த மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாயை அப்துல்லா எம்.பி. வழங்கினார். 

மேலும், கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். இந்த விழாவில் அப்துல்லா எம்.பி., தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி, மணமேல்குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் அக்பர் அலி, தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments