"பிரேதம் பாடம் எடுக்கிறது" என்ற தலைப்பில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்தவர் எழுதி வெளியிட்டிருக்கும் நூல்!



கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மௌலவி முஹம்மது இப்ராஹீம் அன்வாரி-தேவ்பந்தி என்பவர் "பிரேதம் பாடம் எடுக்கிறது" என்ற தலைப்பில் தனது முதல் நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு (சின்னப்பள்ளிவாசல் தர்கா தெரு) 2-வது வீதியை சேர்ந்த மர்ஹூம்.முஹம்மது அலியார்- ஹாஜிமா.ஷம்சுன்னிசா தம்பதியரின் மகனார் மௌலவி முஹம்மது இப்ராஹீம் அன்வாரி-தேவ்பந்தி. இவரது  முதல் படைப்பாக "பிரேதம் பாடம் எடுக்கிறது" என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

"பிரேதம் பாடம் எடுக்கிறது" - என்ற நூல் கீழ் கண்ட தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

1. பிரேதம் பாடம் எடுக்கிறது
2. கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸா வரலாறு 1970 முதல் 2019 வரை
3. பெயர் மாற்றம் என்பது அதன் பழமையான வரலாற்றினை அழிப்பதற்கான முதற்படி
4. பாபரி பள்ளியின் வரலாறு 1528 முதல் 2024 வரை
5. ஆலிம் மற்றும் ஆலிமாக்கள் எவ்வாறு இருக்க வேண்டும்!
6. தொழுகையில் தொப்பி என்பது ஓர் அலங்கார ஆடை

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள: 
மௌலவி முஹம்மது இப்ராஹீம் அன்வாரி-தேவ்பந்தி
+91 9843117232 (வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ளவும்)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments