புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.9 கோடியில் பூங்கா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்




புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி எதிரே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.9 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இந்த பூங்காவை திறந்து வைத்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக வந்தது. இப்பூங்காவில், கலைஞரின் பேனா நினைவு சின்னம், குழந்தைகள் விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, கேண்டீன் மற்றும் இதர அனைத்து வசதிகளுடன் 4 ஏக்கர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி, நகராட்சி ஆணையர் ஷியாமளா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, புதுக்கோட்டை நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments