பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி தொடங்கியது.

ஆதார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியும், எல்காட் நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு புதிய ஆதார் எடுத்தல் மற்றும் ஆதார் புதுப்பிக்கும் பணியை நடத்த வேண்டுமென ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குனர் அறிவுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 154 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 138 பேருக்கு ஆதார் எண் பெறப்பட்டு எமிஸ்ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 47 ஆயிரத்து 16 மாணவ- மாணவிகளுக்கும், அதனோடு சேர்த்து 5 வயது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கும் ஆதார் எண் எடுக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

ஒன்றியம்

இதனைத்தொடர்ந்து இப்பணியானது அனைத்து ஒன்றிய தலைமையிடத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெற உள்ளது.

இந்தநிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அதிகாரி மஞ்சுளா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நைனா முகமது, உதவித் திட்ட அலுவலர் சுதந்திரன், எமிஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை, எல்காட் ஒருங்கிணைப்பாளர் பாலகுமரன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம், புதுக்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரான்ஸி டயானா, ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments