பயணிகள் ரெயிலில் டிக்கெட் முறை மீண்டும் அமல்: புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு ரூ.15 கட்டணம்





புதுக்கோட்டையில் பயணிகள் ரெயிலில் சாதாரண கட்டணம் அமலுக்கு வந்தது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு ரூ.15 கட்டணமாகும்.

பயணிகள் ரெயில்

ரெயில்வேயில் பயணிகள் ரெயிலுக்கான முன்பதிவில்லா டிக்கெட்டில் முன்பு சாதாரண கட்டண முறை இருந்தது. அதன்பின் கொரோனா காலக்கட்டத்தில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் கட்டணம் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் பயணிகள் ரெயிலில் சாதாரண கட்டணம் முறை மீண்டும் அமலுக்கு வருவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி புதுக்கோட்டையில் இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் திருச்சி, காரைக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பயணிகள் ரெயிலில் இந்த கட்டண முறையில் பயணிகள் பயணிக்கலாம். வண்டி எண்களின் தொடக்கத்தில் பூஜ்ஜியத்தில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சிக்கு ரூ.15 கட்டணம்

அதன்படி புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு ரூ.15-ம், காரைக்குடிக்கு ரூ.10-ம், சிவகங்கைக்கு ரூ.20-ம், மானாமதுரைக்கு ரூ.25-ம், திருமயம், கீரனூர், குமாரமங்கலம், வெள்ளனூர், நமணசமுத்திரம், கோட்டையூர் செட்டிநாடு ஆகிய இடங்களுக்கு ரூ.10-ம் கட்டணமாகும். இணைப்பு ரெயில்களில் பயணிக்கும் போது பயணிகள் ரெயிலில் தான் பயணிக்க முடியும். எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு முன்பதிவில்லா டிக்கெட் கட்டணம் தனியாகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments