ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டம்




தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறையில் ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு வேறு, வேறு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய ஊதிய முரண்பாடு மாத சம்பளத்தில் ரூ.2 ஆயிரம் அளவுக்கு உள்ளது. சமவேலைக்கு, சம ஊதியம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரே கல்வித்தகுதி, ஒரே பதவிக்கு இரு வேறு ஊதியங்கள் வழங்கப்பட்டு வரும் முரண்பாட்டை சரிசெய்யக்கோரி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் கடந்த 2 நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் அனோன்சியா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ரூபி, கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேசினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments