தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளையின் சார்பாக சமூக நல்லிணக்க தெருமுனைக்கூட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளையின் சார்பாக 27/02/2024 செவ்வாய் மாலை 7:00 மணியளவில்  சமூக நல்லிணக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைச்செயலாளர் ஷேக்அப்துல்லாஹ் தலைமை வகித்தார்.


 கிளைத் தலைவர் சாகுல் ஹமீது,   செயலாளர் சைபுல்கரீம், பொருளாளர் சல்மான்கான், துணைத்தலைவர் நஜிமுதீன், துணைச் செயலாளர், முகைதீன் அப்துல் காதர், மாணவரணி ஆதம்கான், மருத்துரணி, அஃப்ஸல், தொண்டரணி, ஹஃபீஸ் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்புறை மாநில பேச்சாளர் பா. அப்துல் ரஹ்மான் அவர்கள் சிறப்புறையாற்றினார்.


 இதில் கீழ்கண்ட தீர்மானங்கள்  நிறைவேற்றபட்டன.

 இறுதியாக  கிளைப் பொருளாளர் சல்மான்கான்  நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

1.சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்

சர்வாதிகாரத்தின் கோரப் பிடியில் இந்தியா சிக்கித்தவிக்கும் இந்நேரத்தில் சண்டிகர் நகர மேயர் தேர்தல் மற்றும் தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்குகளில் அடக்கு முறைக்கு வளைந்து கொடுக்காமல் நீதியை நிலைநாட்டிய உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய நடவடிக்கைகளை இந்த தெருமுனைக்கூட்டம் வாயிலாக வரவேற்கிறோம்...

2. இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அதிகரியுங்கள்

 ஆளும் திமுக அரசு  தமிழக முஸ்லீம்களின் நெடுநாளையான கோரிக்கையான இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபர்களுக்கு இடஒதுக்கீட்டில் நடக்கும் அநீதிக்கு உரிய தீர்வுத்தரப்படும் என சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் அவர்களை பாராட்டும் அதே நேரத்தில் இப்பிரச்சினைக்கான உரிய தீர்வை விரைவில் எட்ட வேண்டும் என்றும் நடைமுறையில் உள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என ஆளும் திமுக அரசை இந்த தெருமுனைக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தமிழக அரசின் நிதி உதவியுடன் வக்ப் வாரியத்தின் மூலமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் இஸ்லாமிய மாணவியருக்கு கல்வி உதவி வழங்கப்படும் எனும் அறிவிப்பை இந்த தெருமுனைக்கூட்டத்தின் வாயிலாக
வரவேற்கிறோம்.

3.காசி, மதுரா அரசியல்

பாபர் மசூதியை அடுத்து உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்ஹா பள்ளிவாசல்களை குறிவைத்து சங்பரிவாரத்தினர் பொய்ப் பிரச்சாரத்தை தீவிரமாக்கி உள்ளனர். முகலாய மன்னர் ஒளரங்கசீப், காசி விஸ்வநாதர் கோயிலை இடித்துத்தான் கியான்வாபி மசூதியைக் கட்டியதாக சங்பரிவார சிந்தனை கொண்டவர்கள் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வெறுப்புணர்வை பரப்புகின்றனர். கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள தெற்கு பாதாள அறையையில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவை அடுத்து வழிபாட்டையும் ஆரம்பிக்கப்பட்டு விட்டனர்
வாரணாசி நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் வழிபாட்டுத்தல பாதுகாப்பு சட்டத்திற்கும் எதிரானதாகும் சட்டங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் பெரும்பான்மை மத நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால் நீதியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் .

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைகளை இந்த தெருமுனைக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம்.

4. வாக்கு சீட்டு முறையை அமல்படுத்துக

 நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் மிண்ணனு வாக்கு இயந்திரத்தின் மீதான நம்பிக்கையின்மை வலுவாக அதிகரித்து வருகிறது, மிண்ணனு இயந்திரம் (EVM) நம்பகமானது இல்லை அதில் பல முறைகேடுகளை செய்ய முடியும் என பல அறிவியலாளர்களும், சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர், வாக்கு இயந்திரம் தொடர்பான வழக்குகள் பல நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன, தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை சந்தேகத்திற்கு இடமின்றி  இதுவரை நிரூபிக்க வில்லை, மேலும் கணக்கில வராத பல EVM கள் பொதுஇடங்களில் நடமாடக்கூடிய சூழலையும் சென்ற காலங்களில் பார்க்க முடிந்தது அது குறித்த விசாரணைகளும் இன்னும் முடியவில்லை,

இப்பேர்பட்ட இச்சூழலில் பல வளர்ந்த நாடுகளினாலேயே கைவிடப்பட்ட வாக்கு இயந்திரம் இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாலும், ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக பல நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து எடுத்து வருவதாலும் , தங்கள் வாக்கு யாருக்கு பதியப்பட்டது என்பதை எவ்வித சந்தேகமுமின்றி உறுதி செய்யும் வாக்குச்சீட்டு முறைக்கே மீண்டும் செல்ல வேண்டும் என இந்த தெருமுனைக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments