200 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பயணிகள் ரெயில்களாக மாற்றம் செய்து கட்டணத்தை குறைத்தும் தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
மாற்றம்
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், ரெயில்கள் இயங்கவில்லை. பின்னர், பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரெயில் சேவைகள் படிப்படியாக இயங்கத் தொடங்கியது. இதில், பொது முடக்கத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிக்கட்டும் வகையில் பல்வேறு விதிமுறைகளை ரெயில்வே நிர்வாகம் செயல்படுத்தியது. அந்த வகையில், 200 கிலோமீட்டர் தூரத்துக்குள் இயக்கப்பட்ட பயணிகள் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அல்லது சிறப்பு ரெயில்களாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டது.
குறிப்பாக, நாகர்கோவில் - கோவை பயணிகள் ரெயில், கோவை -மங்களூரு ரெயில், காரைக்கால் - பெங்களூரு பயணிகள் ரெயில் ஆகியவையும் எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றம் செய்யப்பட்டன. இந்த ரெயில்களின் குறைந்தபட்ச கட்டணமே ரூ.30 கொடுத்து பயணம் செய்ய வேண்டியுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இதனால், பயணிகள் சிரமம் அடைந்து வந்தனர். இயல்பு நிலை திரும்பிய பின்னரும் இதே கட்டணம் வசூலிக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பழைய கட்டண நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கட்டணம் குறைப்பு
இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் 200 கிலோ மீட்டருக்குள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பயணிகள் ரெயில்களாக மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பழைய கட்டணம் வசூலிப்பது குறித்த அறிவிப்பை அனைத்து கோட்டங்களுக்கும், தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகம் குறுஞ்செய்தியாக அனுப்பி உள்ளது. அதன்படி, பயணிகள் ரெயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி செல்வதற்கான பயணிகள் ரெயில் கட்டணம் ரூ.70-ல் இருந்து ரூ.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில்களில் கட்டணம் மீண்டும் பழைய நடைமுறைக்கு வந்துள்ளதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள்
மதுரையை பொறுத்தவரை மதுரை- செங்கோட்டை, மதுரை- போடிநாயக்கனூர், மதுரை - ராமநாதபுரம் வரை இயங்கும் பயணிகள் ரெயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டு வந்தது.
தற்போது குறைந்தபட்ச கட்டணமாக மீண்டும் ரூ.10 வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது. அதுவும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ரெயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இதற்கான உத்தரவுகள் ஏறத்தாழ வந்து விட்டது. முழுமையாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்து விடும். வண்டி எண் பூஜ்ஜியத்தில் தொடங்கும் ரெயில்கள் பாசஞ்சர் ரெயில்களாக உள்ளன. அந்த ரெயில்களில் தான் இந்த குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாதாரண கட்டணம் அதிவேக விரைவு ரெயில்களுக்கு பொருந்தாது" என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.