அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மீனவர்கள் வலையில் சிக்கிய காளை மீன்கள் வௌிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது




அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மீனவர்கள் வலையில் சிக்கிய காளை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மீனவர்கள்

தஞ்சைமாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம், கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மறவக்காடு, ஆகிய துறைமுகபகுதிகளில் இருந்து கடலுக்கு சில மீனவர்கள் மீன்பிடிக்கவும் சிலர் இறால் பிடிக்கவும் சிலர் நண்டுபிடிக்கவும் செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடலில் அதிவேக சூரைக்காற்று வீசிவந்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்ககடலுக்குச்செல்லாமல் இருந்து வந்தனர்.

ரூ.750-க்கு ஏலம்

இதையடுத்து காற்றின்வேகம் தற்போது குறைந்துள்ளதால் சில தினங்களாக மீனவர்கள் மீன்பிடிக்ககடலுக்குச் செல்கின்றனர் இந்நிலையில் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர் அப்பொழுது மீனவர்கள் வலையில் பெரிய வகை காளை மீன் 140 கிலோ சிக்கியது. வலையில் சிக்கிய மீனை அதிராம்பட்டினம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்பட்டது வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் கிலோ ரூ. 750 வீதம் ஏலத்தில் எடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments