அடுத்த கல்வியாண்டிற்கான மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வரத்தொடங்கின குடோனில் அடுக்கி வைப்பு




அடுத்த கல்வியாண்டிற்கான மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வரத்தொடங்கின. அதனை குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகள்

தமிழகத்தில் 2023-2024-ம் கல்வியாண்டு வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. பள்ளிகளில் பொதுத்தேர்வுகள், முழு ஆண்டு தேர்வு முடிவடைந்ததும் இந்த கல்வியாண்டு நிறைவு பெறும். அடுத்த கல்வியாண்டு 2024-2025-க்குரியது வருகிற ஜூன் மாதம் தொடங்கும்.

பொதுத்தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும். இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் முன்கூட்டியே அச்சிடப்பட்டு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி துறை மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

விலையில்லா பாடப்புத்தகங்கள்

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் பிளஸ்-2 வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வரத் தொடங்கி உள்ளன. தற்போது முதற்கட்டமாக 6 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் சென்னையில் இருந்து வந்துள்ளது.

இவை அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம் அருகே உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வர உள்ளது. மொத்தப்பாடப்புத்தகங்களும் வந்த பிறகு அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெறும். இந்த பணி வருகிற மே மாதத்தில் மேற்கொள்ளப்படும். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை வட்டாரத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments