175 கி.மீட்டர் தூரம்
திருச்சி ரெயில்வே கோட்டத்தின் முக்கிய மின்மயமாக்கப்பட்ட வழித்தடமான விழுப்புரம்-தஞ்சாவூர் மெயின் லைன் பிரிவில் கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
பயணிகள் அதிக அளவில் பயணிக்கக்கூடிய இந்த மெயின் லைன் பிரிவில் பல்வேறு விரைவு ரெயில்களும், மாநிலங்களுக்கு இடையேயான ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
110 கி.மீ. வேகம் அதிகரிப்பு
175 கி.மீட்டர் தூரம் உள்ள விழுப்புரம்-தஞ்சாவூர் மெயின் லைன் பிரிவில் இதுவரை அனுமதிக்கப்பட்ட வேகமான மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தை, 110 கி.மீட்டராக அதிகரிக்க தெற்கு ரெயில்வேயின் தலைமை அலுவலகத்தில் இருந்து திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
தண்டவாளாத்தின் தரம் மற்றும் நிலைப்புத்தன்மையை நவீன தொழில்நுட்பமான அலைவு கண்காணிப்பு அமைப்பின் மூலம் பரிசோதனை செய்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த வேகம் அதிகரிப்பு நடைமுறைபடுத்தப்படும் எனவும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீடாமங்கலம்-மன்னார்குடி
இந்த வழித்தடத்தில் சோழன் விரைவு ரெயில், செந்தூர் விரைவு ரெயில், உழவன் விரைவு ரெயில், மன்னை விரைவு ரெயில் மற்றும் சென்னை எழும்பூர்-காரைக்கால், தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா விரைவு ரெயில் ஆகிய தினசரி ரெயில் சேவைகள் இந்த மெயின்லைன் பிரிவில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே குறைந்த தூர ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி மன்னார்குடி-பாகத் கி கோதி, மன்னார்குடி-திருப்பதி, ராமேஸ்வரம்- திருப்பதி, ராமேஸ்வரம்-புவனேஸ்வர், ராமேஸ்வரம்- பனாரஸ், காரைக்கால்-மும்பை விரைவு ரெயில்கள் இந்த மெயின் லைனில் இயங்கி வருகின்றன.
மேலும் பேரளம், கடலூர் துறைமுகம், விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும் மயிலாடுதுறை-திருவாரூர் ரெயில்கள் மற்றும் விழுப்புரம் புதுச்சேரி ரெயில்கள் இயங்கும் கிளை வழித்தடங்களுக்கு இந்த மெயின் லைன் இணைப்பு லைனாகவும் இருந்து வருகிறது. மேலும் நீடாமங்கலம்-மன்னார்குடி இடையேயான அகல ரெயில்பாதையில் ரெயிலின் வேகம் 80 கி.மீட்டரில் இருந்து 110 கி.மீட்டருக்கு அதிகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.