காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி: பிரதமர் மோடி திறந்து வைப்பு




காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஒரு நல்ல மருத்துவமனையை இந்த காரைக்கால் பகுதியில்  திறந்து வைப்பதற்கு முயற்சி செய்து திறந்து வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஒரு ஆளுநராக மட்டுமல்ல, ஒரு மருத்துவராகவும் கூறுகிறேன். ஒரு மருத்துவக் கல்லூரி திறக்கும்போது அது எந்த அளவுக்கு மக்களுக்கு பலன் தரும் என்பதை நான் அறிவேன். ரூரல் ஹெல்த் சர்வீஸ் மிக அவசியமானது.

காரைக்கால் போன்ற பகுதியில் இவ்வளவு வசதியோடு சுமார் ரூ. 450 கோடி செலவில் இவ்வளவு கட்டமைப்போடு நமக்கு கிடைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். 2021-ம் ஆண்டு நான் ஜிப்மர் இயக்குனரோடு இந்த வளாகத்திற்கு வந்தேன். கட்டுமான பணிகள் அப்போது நடைபெற்று வந்தது. 

அப்போது அவர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இரு திறக்கப்படும் என்று சொன்னார். சொன்னபடி இரண்டு ஆண்டுகளுக்குள் இது திறக்கப்படுகிறது. அனைவருக்கும் நன்றி தெரிவித்து வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 1 லட்சத்து 25 ஆயிரம் மருத்துவ இடங்கள். ஒரே நேரத்தில் மட்டும் ஒரே ஆண்டில் மட்டுமே 8,500 இடங்கள் அதிகரிக்கப்பட்டு இன்று ஒரு லட்சத்து 25 ஆயிரம் மருத்துவ இடங்கள் இருக்கிறது. மருத்துவக் கல்லூரி 64 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முதுகலை பட்டப் படிப்புக்கான இடங்கள் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஜிப்மர், காரைக்கால் மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறது. இந்த வகையில் உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கனடாவிற்கு படிக்க சென்றிருந்தபோது இத்தனை வசதிகள் நம் கிராமத்திற்கு வராதா என்று ஏங்கி இருந்தேன். அவை நான் துணைநிலை ஆளுநராக இருக்கின்றபோது நிறைவேறுவது இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சில வசதிகள் இல்லாததால் நோயாளிகள் இறப்பதை நான் பார்த்திருக்கிறேன். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் கடைசி மூன்று ஆண்டுகள் படிக்கும்போது எப்படி ஒரு கிராமத்தில் நோயாளிகள் சிரமப்படுகிறார்கள் என்பதை கண்டறிந்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது அதற்கு மிக அருகில் இப்படிப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரி வருவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியை தருகிறது.

நான் மருத்துவ மாணவர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் இங்கு இருக்கக்கூடிய சலுகைகளில் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது நானே நோயாளிகளிடம், சிகிச்சை பெறும் மக்களிடம் நேரடியாக பேசக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வேன். எவ்வளவு மேம்பட்ட வசதிகள் இருந்தாலும் அது கடைகோடியில் உள்ள மனிதர்களுக்கு பயன்பெற வேண்டும் என்பதுதான் ஒரு அரசாங்கத்தின் ஆசையாக இருக்க வேண்டும்.

நான் பாரதப் பிரதமரை வணக்கத்துடன் நினைப்பதற்கு காரணம், ஆயுஷ்மான் பாரத் என்கிற திட்டம். புதுச்சேரியில் மட்டுமே ரூ. 64 கோடி அதற்காக செலவிடப்பட்டிருக்கிறது. சில நூறு ரூபாய் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் இறந்து கொண்டிருந்த சூழல் இருக்கும்போது ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டின் மூலம் ஒரு குடும்பத்தில் ஒரு நபரானவர் ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். இதே நாளில் சென்னையில் கட்டப்பட்டிருக்கின்ற ரூ.150 கோடியில் முதியோர் மருத்துவமனை இந்தியாவிலே முதன்முதலாக முதியோருக்கு என்று தனியாக மருத்துவமனை கட்டப்பட்டு இருப்பது சென்னையில் என்பதிலும் எனக்கு மகிழ்ச்சி.

அதேபோல இன்று 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மக்களுக்காக கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள எய்ம்சும் கட்டி முடிக்கப்படும். அங்கே மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே உள்ள மாணவர்களுக்கு புத்தகங்களாக யார் இருக்கிறார்கள் என்றால் இந்த காரைக்கால் சார்ந்த மக்கள். உங்களுக்கு புத்தகமாக இருக்கும் இங்குள்ள மக்களுக்கு நீங்கள் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். நல்ல மருத்துவமனை இங்கு இந்த பகுதி மக்களுக்கு வந்திருக்கிறது. இது தமிழக மக்களுக்கும் பயன்படும்.

இப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரம் நோயாளிகளில் ஏறக்குறைய 70 ஆயிரம் நோயாளிகள் தமிழ்நாட்டை சார்ந்த மக்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் பலன் அளித்து வருகிறது. ஆக சுற்றியுள்ள மாநிலத்தின் மக்களுக்கும் ஜிப்மர் மருத்துவமனை உதவி வருகிறது.  காரைக்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், புதுவை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ஜிப்மர் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவே கருதுகிறேன். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நீங்கள் செய்த உதவி அளப்பரியது. நீங்கள் பல உதவிகளை செய்திருக்கிறீர்கள் 

ஜிப்மரைப் பொறுத்த மட்டில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் கொரோனா நிலைமையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிப்போம். அந்த கூட்டத்தில் தவறாது இயக்குனர் கலந்து கொள்வார். அந்த நேரத்தில் ஜிப்மரின் பங்கு அளப்பரியதாக இருந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியை நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக கருதுகிறேன்.

காரைக்கால் என்றால் காரைக்கால் அம்மையார், காரைக்கால் என்றால் ஜிப்மர் என்கிற அடையாளத்தை இந்த இடம் பெற இருக்கிறது. சாமானியர்களுக்கு இந்த மருத்துவமனை பலன் அளிக்க இருக்கிறது. மருத்துவமனைக்கு நோயாளிகள் வர வேண்டும். அதேபோல வரும் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை பெற்று பூரணமாக குணமடைய வேண்டும்" என்று நான் பிரார்த்திக்கிறேன் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments