அதிரை ECRல் 3வது நாளாக இன்றும் சாலை விபத்து.. பைக்குகள் மோதி வாய்க்காலில் விழுந்த இளைஞர்






அதிரை ஈசிஆர் சாலையில் தொடர்ந்து சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன நேற்று சாலை விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்தார். அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபர் சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த நிலையில் இன்று மாலை அதிரை கிழக்கு கடற்கரை சாலை பிலால் நகர் பாரத் பெட்ரோல் பங்க் அருகே பைக்குகள் மோதி அருகில் உள்ள வாய்க்காலில் ஒருவர் விழுந்தார்.

உடனே அங்கிருந்த நபர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அதிரை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்டு வரும் சாலை விபத்துகள் வாகன ஓட்டிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன.

News Source : Adirai Pirai 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments