ஒரத்தநாடு அருகே சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக எச்சரிக்கை பதாகை கிராம மக்கள் வைத்ததால் பரபரப்பு




ஒரத்தநாடு அருகே அதிகரிக்கும் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக எச்சரிக்கை விடுத்து கிராம மக்கள் வீதிகளில் பதாகை வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மது விற்பனை

ஒரத்தநாடு பகுதியில் உள்ள சில கிராமங்களில் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக எச்சரிக்கை பதாகையை ஊரில் உள்ள முக்கிய வீதிகளில் கிராம மக்கள் தாங்களே முன்வந்து வைத்துள்ளனர். அதன்படி தென்னமநாடு வடக்கு தெரு பொதுமக்கள் சார்பில் ஊரின் முக்கிய பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், சட்டவிரோதமாக மது விற்பதும், அதை வாங்கி குடிக்க வருபவர்களையும் இரவு நேரங்களில் தெருவிற்கு சம்பந்தமில்லாத நபர்கள் வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் மது விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து காவல்துறை வசம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போலீசார் நடவடிக்கை

இவ்வாறு சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக கிராம மக்கள் எச்சரிக்கை பாதகையினை ஊரின் முக்கிய வீதிகளில் வைத்துள்ள சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே ஒரத்தநாடு போலீஸ் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஒரத்தநாடு, திருவோணம், பாப்பாநாடு, வட்டாத்திக்கோட்டை ஆகிய போலீஸ் சரக பகுதிகளில் உள்ள கிராமங்களில் அனுமதி இன்றி மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments