மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர் மெர்சி ரம்யா




புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் `காபி வித் கலெக்டர்' என்ற நிகழ்ச்சியில், கலெக்டர் மெர்சி ரம்யா, ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் நேற்று கலந்துரையாடினார். அப்போது மாணவிகளிடம் எதிர்கால லட்சியம் குறித்து கேட்டறிந்தார். மாணவிகளும் தங்களது லட்சியங்களை தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகள் குறித்து கூறினர். மாணவ-மாணவிகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து கலெக்டர் மெர்சிரம்யா பேசுகையில், "மாணவிகள் அனைவரும் பாடப் புத்தகங்களை பயில்வதுடன், சிறந்த அறிஞர்களின் புத்தகங்கள், பொதுஅறிவு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவை பெருக்கிக்கொள்ளும் சிறந்த புத்தகங்களையும் படிக்க வேண்டும். இதன்மூலம் நீங்கள் இலக்காக வைத்திருக்கும் உயர்ந்த நிலையினை அடைவதற்கு வழிவகை ஏற்படும்'' என்றார். இந்நிகழ்ச்சியில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments