நாகப்பட்டினம் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், 500 ஆண்டுகளை கடந்த நாகூர் ஆண்டவர் தர்கா, எட்டுக்குடி முருகன் கோயில், சூரசம்ஹாரத்தின் போது சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்யும் சிக்கல் சிங்காரவேலர் கோயில் என சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் வருகை தரும் இடமாக நாகப்பட்டினம் மாவட்டம் அமைந்துள்ளது.அந்த அளவிற்கு புகழ் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாலை வசதி மிகவும் குறைவாக உள்ளதால் நாகப்பட்டினத்தை நோக்கி வருவோர்கள் மனஉளைச்சல் அடைந்து செல்கின்றனர்.
இதனால் நாகப்பட்டினம் விழுப்புரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இவ்வாறு தொடங்கப்பட்ட நாகப்பட்டினத்தில் இருந்து விழுப்புரம் வரையிலான 180 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டது. ஒரே கட்டமாக பணிகள் செய்தால் பணிகள் முடிப்பதில் காலதாமதம் ஏற்படும் என இந்த சாலை பணி நான்கு கட்டமாக பிரிக்கப்பட்டு சாலை பணிகள் தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக விழுப்புரம் தொடங்கி புதுச்சேரி வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கும். இரண்டாம் கட்டமாக புதுச்சேரி தொடங்கி பூண்டியான்குப்பம் வரை 38 கிலோ மீட்டர் தூரம், மூன்றாம் கட்டமாக பூண்டியான் குப்பம் தொடங்கி சட்டநாதபுரம் வரை 56.8 கிலோ மீட்டர் தூரம், நான்காம் கட்டமாக சட்டநாதபுரம் தொடங்கி நாகப்பட்டினம் வரை 55.75 கிலோ மீட்டர் தூரம் என பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. .
இந்நிலையில் ஒரு சில இடங்களில் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவுற்று வேற லெவலில் காட்சியளிக்கிறது
விரைவில் விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் நான்குவழிச்சாலை பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.