தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,172 வழக்குகளுக்கு சமரச தீர்வு




புதுக்கோட்டையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,172 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன.

மக்கள் நீதிமன்றம்

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் குடும்ப நல மாவட்ட நீதிபதி ஜெயந்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தி, அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைபொருள் தடுப்பு நீதிமன்ற சிறப்பு மாவட்ட அமர்வு நீதிபதி பாபுலால், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பிச்சை, முதன்மை சார்பு நீதிபதி சசிகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி பூர்ணிமா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்- 1 ஜெயந்தி, வக்கீல் சங்க தலைவர் சின்னராசு, புதுக்கோட்டை மாவட்ட குற்ற வழக்கு எதிர்வாத சட்ட உதவி அமைப்பின் தலைமை வக்கீல் ஷேக்திவான், துணை தலைமை வக்கீல்கள் மதியழகன், அங்கவி மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

1,172 வழக்குகள் சமரச தீர்வு

புதுக்கோட்டை நகரத்தில் மொத்தம் 7 அமர்வுகளும், மாவட்டம் முழுவதும் 12 அமர்வுகளும் விசாரணைக்காக அமைக்கப்பட்டு 3,090 வழக்குகள் பட்டியலிடப்பட்டது. இதில் 1,172 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது. உரியவர்களுக்கு ரூ.9 கோடியே 65 லட்சத்து 88 ஆயிரத்து 195 வரையிலான தொகைக்கு தீர்வு காணப்பட்டது. இந்தநிகழ்வினை, புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திரகண்ணன் ஒருங்கிணைத்தார்.

ஆலங்குடி

ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி தலைமை தாங்கினார். இதில் வக்கீல் சங்க தலைவர் எஸ்.பி.ராஜா, பட்டியல் வக்கீல் ரெங்கராஜ், அரசு வக்கீல் கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதிமன்றத்தில் 450 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 415 வழக்குகள் பேசி முடிக்கப்பட்டது. மேலும், கல்விக்கடன், விவசாய கடன், குழுக்கடன் உள்ளிட்ட வழக்குகள் சமரச தீர்வு மூலம் ரூ.21½ லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments