கோவை ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்-மெமு ரயிலை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்!




கோவை ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ். மெமு ரயிலை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

மெமு ரயில்
இதனை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மெமு ரயிலானது விரைவாகவும் செல்லக்கூடியது என்பதால் ஏராளமான மக்கள் பொது போக்குவரத்திற்காக வேலைக்கு செல்பவர்கள் என பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.


மக்கள் கோரிக்கை
இந்நிலையில் இந்த ரயிலை போத்தனூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர். மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தெற்கு ரயில்வேயும் இது தொடர்பாக ரயில்வே வாரியத்திற்கு அனுமதிக்காக காத்திருந்தது.

கோவை மக்கள் மகிழ்ச்சி
இவ்வாறு இருக்கும் நிலையில் ரயில்வே வாரியம் போத்தனூர் வரை மெமு ரயிலை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் கோவை மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேட்டுப்பாளயம்-கோவை
மேட்டுப்பாளையம்-கோவை இடையே இயக்கப்பட்டு வரும் 3 மெமு ரயில்கள் போத்தனூர் வரை நீட்டிக்கப்படுகிறது. வண்டி எண்; 06009/06812 காலை 8 மணி 20 நிமிடங்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கிளம்பும் ரயிலானது 8 மணி 57 நிமிடங்களுக்கு கோவை வரும் பின்னர் 9 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து 9 மணி 25 நிமிடங்களுக்கு போத்தனூர் ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

கோவை ரயில் நிலையம்
பின்னர் வண்டி எண் 06812 போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9 மணி 40 நிமிடங்களுக்கு கிளம்பி கோவை ரயில் நிலையத்துக்கு 9 மணி 55 நிமிடங்களுக்கு வரும் பின்னர் அங்கிருந்து கிளம்பி 10 மணி 45 நிமிடங்களுக்கு மேட்டுப்பாளையம் வரும்.

போத்தனூர்
இதேபோல் வண்டி எண் 06815/06816 மதியம் 1 மணி 5 நிமிடங்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கிளம்பி போத்தனூர் ரயில் நிலையத்துக்கு 2 மணி 10 நிமிடங்களுக்கு வரும். இதேபோல் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து 3 மணி 30 நிமிடங்களுக்கு கிளம்பி மேட்டுப்பாளையத்துக்கு 4 மணி 30 நிமிடங்களுக்கு சென்றடையும்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

ரயில் நிலையம்
இதேபோல் வண்டி எண் 06822/06823 இரவு 6 மணி 55 நிமிடங்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கிளம்பி போத்தனூர் ரயில் நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு வரும், போத்தனூர் ரயில் நிலையத்துக்கு 3 மணி 30 நிமிடங்களுக்கு மேட்டுப்பாளையத்துக்கு 8 மணி 10 நிமிடங்களுக்கு சென்றடையும்.
கோவை ரயில் நிலையம்
பின்னர் வண்டி எண் 06812 போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9 மணி 40 நிமிடங்களுக்கு கிளம்பி கோவை ரயில் நிலையத்துக்கு 9 மணி 55 நிமிடங்களுக்கு வரும் பின்னர் அங்கிருந்து கிளம்பி 10 மணி 45 நிமிடங்களுக்கு மேட்டுப்பாளையம் வரும்.
போத்தனூர்
இதேபோல் வண்டி எண் 06815/06816 மதியம் 1 மணி 5 நிமிடங்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கிளம்பி போத்தனூர் ரயில் நிலையத்துக்கு 2 மணி 10 நிமிடங்களுக்கு வரும். இதேபோல் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து 3 மணி 30 நிமிடங்களுக்கு கிளம்பி மேட்டுப்பாளையத்துக்கு 4 மணி 30 நிமிடங்களுக்கு சென்றடையும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments