47 மணி நேரத்தில் சுமார் 2,900 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் அதிவிரைவு ரயில்.. எங்கிருந்து எங்கு செல்கிறது தெரியுமா?




இந்திய ரயில்வேயின் கீழ் பல்வேறு ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரம் பயணிக்க, மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர். அதுமட்டுமன்றி இந்திய ரயில்வேயின் கீழ் பல்லாயிரக்கணக்கான மக்கள்  வேலைவாய்ப்பும் பெருகின்றனர்.

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக விரைவு ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் ரயில்கள் முதல் சரக்கு ரயில்கள் வரை ரயில்களின் சராசரி வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயில்கள் தற்போது மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயனிக்கின்றன. இதேபோல வந்தே பாரத் போன்ற அதிவிரைவு ரயில்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 முதல் 180 கிலோ மீட்டராக உள்ளது.

ஆனால் வெறும் 48 மணி நேரத்தில் சுமார் 2,900 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் ரயில் ஒன்று உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?. டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதின் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி வரை இந்த அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. டெல்லியில் இருந்து காலை 5.20 மணிக்கும் புறப்படும் இந்த ரயில் சரியாக 47 மணி நேரம் 20 நிமிடத்தில் கன்னியாகுமரியை சென்றடைகிறது.

டெல்லியின் இருந்து கன்னியாகுமரிக்கு பயணிக்க இதுவே சிறந்த ரயில் ஆகும். நாட்டின் தெற்கு பகுதியுடன் டெல்லியை இணைக்கும் ரயில்களில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்வது சற்று கடினமே. உரிய நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றால் டிக்கெட் கிடைக்காது.

காலை 5.20 மணிக்கு புறப்படும் இந்த திருக்குறள் அதிவிரைவு ரயிலின் முதல் நிறுத்தம் சுமார் 130 கிலோ மீட்டர் ஆகும். அதன்படி 2,900 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 47 மணி நேரத்தில் கடந்து விடுகிறது. இந்த ரயில் பயணத்தில் மொத்தம் 21 நிறுத்தங்கள் மட்டுமே உள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments